யேகோவா-யீரே
JEHOVAH-JIREH
55-08-17
கால்ஸ்று, ஜெர்மனி

1. உங்களுக்கு நன்றி ஐயா. கர்த்தராகிய இயேசுவின் தாழ்மையுள்ள ஊழியக்காரனாகிய நான் உங்களை வாழ்த்துகிறேன். தேவனுடைய சமாதானம் உங்களோடு கூட இருப்பதாக. சென்ற மாலையில், என்னுடைய பாடத்தை (text) முடிக்கும்படியான ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் போயிற்று. நான் வயது சென்ற ஜனங்களை ஆறுதல் படுத்த முயற்சித்துக் கொண்டிருந்த அந்த வேதவாக்கியத்திலுள்ள ஒரு இடத்தை அடைந்தேன். அங்கே மிகவும்..... நமக்கு வயதாகும் போது, தேவன், நம்மைக் கைவிடவில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்படி செய்யவே நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். அவர் இன்னும் நம்மை நேசிக்கிறார். அவர் ஒரு போதும் நம்மை மறப்பதில்லை.
அவர், “ஒரு தாய் தன் சிறு பாலகனை மறக்கலாம், ஆனால் நான் ஒரு போதும் உங்களை மறப்பதில்லை. என் உள்ளங்கையில் நீங்கள் வரையப்பட்டிருக்கிறீர்கள் (செதுக்கப்பட்டு இருக்கிறீர்கள்)” என்று கூறியிருக்கிறார்.
2. எனவே நமக்கு வயதாகும் போது, நாம் கவலைப்பட ஒன்றுமில்லை. ஏதோவொரு நாளில், நாம் வாலிபர்களாகவும் வாலிப பெண்களாகவும் இங்கே பூமிக்கு திரும்பவும் வந்து, இனி ஒரு போதும் வயதானவர்களாக ஆக மாட்டோம். அது அற்புதமாக இல்லையா-? அதற்காக எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. அப்படியானால் நாம் இப்பொழுது இங்கே இருக்கையில், அவர் நம்மை நேசிக்கிறார். அவர், ஒரு போதும் நம்மை விட்டு விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை. அவர் உலகத்தின் முடிவுபரியந்தம் நம்மோடு இருப்பதாக” அவரே கூறியிருக்கிறார். நான் அதற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன்.
3. இப்பொழுது, இன்றிரவுக்குப் பிறகு, நமக்கு இன்னும் இரண்டு இரவுகள் உள்ளன. அதிக காலம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நாம் வெறுமனே ஒருவரையொருவர் அறிந்து கொள்ள தொடங்கும் போதே, போய் வருகிறேன் (good-bye) என்ற பிரியாவிடை வாழ்த்து சொல்ல வேண்டியிருக்கிறது. உலகத்தின் எல்லா பல்வேறு பாகங்களிலும் அவ்விதமே இருப்பதாகத் தோன்றுகிறது. நான் அருமையான நண்பர்களைச் சந்தித்திருந்தும், நான் பிரியாவிடை வாழ்த்து சொல்ல வேண்டியிருக்கிறது, ஆனால் நாம் சந்தித்து, ஒரு போதும் பிரியாவிடை வாழ்த்து கூறாமலிருக்கும் நாளுக்காகவே நாம் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இயேசு வரும் போது, எல்லா தொல்லைகளும் தீர்ந்து விடும். அந்த நாளுக்காகத் தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது, அதைக் குறித்த நிச்சயத்தோடு இருப்பதற்கு, அவர் தமது வார்த்தைகளை நமக்குக் கொடுத்திருக்கிறார். அவர் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்து, நம்மெல்லார் மேலும் தமது அன்பை வெளிப்படுத்துகிறார். அது அற்புதமாக இல்லையா-? நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு சந்தோஷத்தை உண்டாக்கவில்லையா-?
நான் எதுவுமாக இருப்பதைக் காட்டிலும் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதையே அதிகம் விரும்புகிறேன். நான் எல்லா தேசங்களுக்குள்ளும், வெள்ளை மனிதனிடமும், கறுப்பு மனிதனிடமும், பழுப்பு மனிதனிடமும், மஞ்சள் நிற மனிதனிடமும், சிவப்பு நிற மனிதனிடமும், போகும் போது, அவர்கள் எல்லாரும் ஒரே விதமாகவே இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள்... அவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பார்களானால், அவர்கள் ஒருவரையொருவர் நேசிப்பார்கள்.
4. சமீபத்தில், பின்லாந்தில் ஒரு சிறு பையன் மரணத்திலிருந்து எழுந்த போது... உங்களில் அநேகர் அதை வாசித்திருக்கிறீர்கள். அந்த இரவில் அவர்கள் என்னை மெசாலிக்குத் திரும்ப அழைத்துக் கொண்டு போன போது, ஏன், அவர்கள் ரஷ்ய ராணுவ வீரர்களாக இருந்தார்கள், அவர்கள் பக்கத்தில் நெடுகிலும் நின்று கொண்டிருந்தார்கள். பின்லாந்து தேசத்து இராணுவ வீரர்கள் தான் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். நான் கடந்து செல்லும் போது, அவர்கள் சல்யூட் அடித்தபடி அட்டன்ஸன் நிலையில் நின்றார்கள், அவர்கள் கன்னங்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவர்கள் அந்தக் கட்டிடத்தைச் சுற்றிலும் வந்த போது, அவர்கள் தங்கள் கரங்களை பின்லாந்து இராணுவ வீரர்களைச் சுற்றிலும் போட்டுக் கொண்டு, ஒருவரை ஓருவர் கட்டி அணைத்து, தோளில் அன்பாகத் தட்டிக்கொடுத்தார்கள்.
ஒவ்வொரு பிரச்சனைக்கும் கிறிஸ்துவே பதிலாக இருக்கிறார். எல்லா மனிதர்களையும் சகோதரர்களாக ஆக்குவதற்கு அதுவே-அதுவே பதிலாக உள்ளது. தேவன் ஒரு மனிதனை - எல்லா மனிதரையும் ஒரே இரத்தத்தால் உண்டாக்கிய் இருக்கிறார்.
நான்... நீங்களோ நானோ வியாதியாயிருந்து, நமக்கு இரத்தம் தேவைப்படுமானால், கறுப்பு மனிதனோ, மஞ்சள்நிற மனிதனோ, அல்லது மற்ற எந்த மனிதனும் நமக்கு இரத்தம் கொடுக்க முடியும். ஆனால் மிருகத்தின் இரத்தத்தை நம்மால் எடுத்துக்கொள்ள முடியாது. அது நம்மைக் கொன்று போடும். தேவன் எல்லா மனிதர்களையும் ஒரே இரத்தத்தைக் கொண்டு உண்டாக்கி இருக்கிறார். எனவே உலகம் முழுவதும் நாம் சகோதரர்களாக இருக்கிறோம்.
5. இப்பொழுது, நான் என்னுடைய மூலப்பாடத்தைத் தொடர விரும்புகிறேன். அது ஆதியாகமம் 22:14ல் காணப்பட்டது. மூலபாடம் "யேகோவா-யீரே” - வாக இருந்தது. இப்பொழுது, தேவனுக்கு ஏழு ஒருங்கிணைந்த மீட்பின் நாமங்கள் உள்ளன. இப்பொழுது, இந்த ஒருங்கிணைந்த மீட்பின் நாமங்களில், அது தேவன் தம்முடைய தற்போதைய மனப்பான்மையை தமது சகல சிருஷ்டிகளுக்கும் வெளிப்படுத்துவதாக அது இருந்தது, எல்லா தலைமுறையிலும், அவர்களுக்காக அவர் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதை தேவன் வெளிப்படுத்துவதாக அது இருந்தது. உங்களால் அவருடைய ஒருங்கிணைந்த நாமத்தை வேறுபிரிக்க முடியாது.
6. இப்பொழுது, வாஷிங்டன் டிசியில், நான் -நான்.... என்னுடைய பெயர் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அது என்னை ... ஆக ஆக்குகிறது. அவர்கள்... தேசியபிரகாரமாக நான் யார் - யாராயிருக்கிறேன் என்றும், என்னுடைய தகப்பன் மற்றும் தாய் யார் என்றும், நான் பிறந்து போது, எனக்கு எவ்வளவு எடையிருந்தது என்றும், என்னைப் பற்றிய விவரணமும், என்னுடைய கட்டைவிரல் கைரேகை என்னவென்றும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் பாருங்கள், அது தேசத்திற்கு வெளிப்படுத்துதலாக இருக்கிறது, நான் யாரென்றும் மற்றும் வில்லியம் பிரன்ஹாம் என்றும் அங்கே மேலே வாஷிங்டனில் பதிவு செய்து வைக்கப்பட்டு இருக்கிறது. அது என்னுடைய தேசத்திற்கு என்னைப்பற்றிய - அடையாளமாக இருக்கிறது. இப்பொழுது, நான்.... அது என்னுடைய பெயராக இருக்கிறது.
எனவே இந்த பூமியின் மேல் இராஜாவாயிருக்கும்படி, தேவன் பரலோகத்திலிருந்து இறங்கி வந்த போது, அவர் ஏழு ஒருங்கிணைந்த மீட்பின் நாமங்களில் தமது பிரஜைகளுக்கு தம்மை வெளிப்படுத்தினார். யேகோவா -யீரே என்பது அவருடைய முதலாவது நாமமாயிருக்கிறது. அதற்கு, "தேவன் தமக்காக ஒரு பலியை அருளுவார்" என்று அர்த்தம். ஒருங்கிணைந்த அடுத்த மீட்பின் நாமம் யாதெனில், யேகோவா -ரப்பா (Jehovah-rapha), அதற்கு, 'உன்னை சுகமாக்குகிற கர்த்தர் நானே” என்று அர்த்தம். தொடர்ந்து, யேகோவா எங்கள் விருது கொடியாகவும், எங்கள் சமாதானமாகவும், எங்கள் கேடயமாகவும், எங்கள் நீதியாகவும் அவர் போகிறார். அவ்வாறு தான் அவர் நமக்கு இருக்கிறார். எனவே நம்மால் அந்த நாமங்களைப் பிரிக்க முடியாது. அவர் இன்னும் யேகோவா-யீரே-வாக இருப்பாரென்றால், அவர் யேகோவா -ரப்பாவாகவும் கூட இருந்தாக வேண்டும். அவர் நமக்காக அருளப்பட்ட பலியாக இருப்பாரானால், நம்முடைய சுகமளிப்பவராகவும் கூட இருந்தாக வேண்டும். எனவே அந்த நாமங்கள் பிரிக்க முடியாதது.
7. நாம் அவரை இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது, நாம் நிச்சயமாக அவரை சுகமளிப்பவராகவும், நம்முடைய சமாதானமாகவும், நம்முடைய கேடயமாகவும், சிறிய கொடியாகவும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும், இந்த எல்லா மீட்பின் நாமங்களும், இப்பொழுது, தம்முடைய ஜனங்களிடம் தேவனுடைய தற்போதைய மனப்பான்மையானது ஒரே விதமாகவே இருக்கிறது.
இப்பொழுது, நானே சிந்திக்கிறேன், செய்யப்பட வேண்டிய எல்லாவற்றையுமே தேவன் செய்து முடித்து விட்டார். இப்பொழுது, அவர் முதலாவது பழைய ஏற்பாட்டை முன்னடையாளங்களாக வைத்தார். அவர் நியாயப்பிரமாணத்தை அனுப்பினார். அதன் பிறகு அந்த நியாயப் பிரமாணத்தை ஆதரிப்பதற்காக அவர் தீர்க்கதரிசிகளை அனுப்பினார். நியாயப் பிரமாணமானது முழு தேசத்திற்குமானதாக இருந்தது. தீர்க்கதரிசி இயற்கைக்கு மேம்பட்டதைக் காண்பிக்க வேண்டி இருந்தது. நியாயப் பிரமாணமானது எழுத்தாக, நியாயப்பிரமாணத்தைப் பற்றிய எழுத்தாக இருந்தது. ஆனால் தீர்க்கதரிசியோ இயற்கைக்கு மேம்பட்ட அடையாளமாக இருந்தான். அவர் இஸ்ரவேலருக்காக என்ன செய்தாரோ, அதையே சபைக்காகவும் செய்தார்.
8. இன்று வேதாகமமானது எழுத்தாக இருக்கிறது. அது - தேவன் தம்முடைய ஜனங்களை நோக்கியுள்ள அவருடைய வெளிப்பாடாக அது இருக்கிறது. சபையானது எங்கே கட்டப்பட வேண்டும் என்பதைக் குறித்தும், இரட்சிப்பின் திட்டத்தைக் குறித்தும், எவ்வாறு ஜீவிப்பது என்பதைக் குறித்தும், அண்டை வீட்டாரை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதைக் குறித்தும், அவருடைய தீர்க்கதரிசனங்களைக் குறித்தும் உள்ள மூல வரைபடமாக (Blueprint) இருக்கிறது. அதற்குப் பிறகு, அவர் இந்த வார்த்தையை உறுதிப்படுத்தும்படிக்கு பரிசுத்த ஆவியை அனுப்புகிறார். அதைச் செய்ய வேண்டுமானால், முதலாவதாக அவர் சபையில், அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும், சுவிசேஷகர்களையும் ஏற்படுத்துகிறார் (sets), இவைகள் எல்லாமே சபை பூரணப்படும்படியாகவே இருக்கிறது. அது சபை அலுவல்களாக இருக்கின்றன. இங்கே பூமியின் மேலுள்ள அலுவல் அல்ல, ஆனால் பரலோகத்திலிருந்து வருகிற அலுவல். அதன் பிறகு அவர் சபையில், சுகமளிக்கும் வரங்களையும், தீர்க்கதரிசன வரங்களையும் அனுப்புகிறார்.
9. இப்பொழுது, ஒரு தீர்க்கதரிசன வரத்திற்கும், ஒரு தீர்க்கதரிசிக்கும் வித்தியாசம் உள்ளது. ஒன்று ஒரு தீர்க்கதரிசன வரம், மற்றொன்று ஒரு தீர்க்கதரிசி. ஒரு தீர்க்கதரிசன வரமானது நிச்சயமாக இரண்டு மூன்று ஆவிக்குரிய மனிதர்களால் நிதானிக்கப்பட்டாக (judged) வேண்டும். அது இன்றிரவில் ஒரு நபர் மேலும், நாளை இரவில் வேறொரு நபர் மேலும், அடுத்த இரவில் வேறொருவர் மேலும் வரலாம். அது என்னவாக இருக்கிறது, ஒரு சபையில், ஒவ்வொரு தனி சரீரத்திலும், அது ஒரு வரமாக இருக்கிறது.
ஆனால் ஒரு தீர்க்கதரிசியோ வித்தியாசமானவன். அவர்கள் ஒரு தீர்க்கதரிசியாகவே பிறக்கிறார்கள். அவர்கள் தீர்க்கதரிசிகளாகவே எழும்புகிறார்கள். அவர்கள் கூறுகிற எல்லாமே, ஒவ்வொரு முறையும் உண்மையாக இருந்தாக வேண்டும், அல்லது அது ஒரு தீர்க்கதரிசியாக அந்த அலுவலில் அடையாளம் கண்டு கொள்ளப்பட முடியாது. இப்பொழுது, தேவன் நமக்காக அற்புதமாக காரியங்களைச் செய்திருக்கிறார். அவர் யாரும் கெட்டுப்போக விரும்புவதில்லை. நாம் எல்லாருமே அவரிடம் வீட்டிற்கு வருவதையே அவர் விரும்புகிறார்.
இந்த உலகத்தின் பொருட்கள் நம்மிடம் - நம்மிடம் அதிகம் கிடையாது, ஆனால் தேவனால் கட்டி உண்டாக்கப்பட்ட ஒரு நகரத்திற்காகவே நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். அவர் அவ்வளவாய் நம்மிடம் அன்புகூருகிறார். ஆகையால் தான் அவர் இந்தக் காரியங்களை நமக்காகச் செய்கிறார். நீங்கள் வெறுமனே அவரை விசுவாசிப்பதே அவருக்குப் பிரியம்.
10. இப்பொழுது, தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்ள வேண்டியவராய் இருக்கிறார். அவருடைய அதே நியாயப்பிரமாணம் அவரைக் குறித்து அதை வெளிப் படுத்துகிறது. நீங்கள் ஹைட்ரஜனையும் (ஹைட்ரஜனில் ஒரு -ஒரு - ஒரு பாகம், அது இன்னும் தண்ணீராக உள்ளது, நீங்கள் பாருங்கள்-?) ஆக்ஸிஜனில் இரண்டு பாகத்தையும் எடுத்துக் கொண்டு, அது ஒன்றாகப் போகுமானால், வேதியியல் மற்றும் விஞ்ஞானத்தின் பிரமாணமானது ஒவ்வொரு முறையும் தண்ணீரையே உண்டாக்கும். அது அவ்வாறே உண்டாக வேண்டும். அது ஆதியில் அதைச் செய்திருக்குமானால், அது இப்பொழுதும் அதையே செய்தாக வேண்டும்.
தேவன், மூலமாகவும் அதே காரியம் தான். தேவன் ஒரு பிரமாணத்தை உண்டாக்கி, அவருடைய வார்த்தையை உரைத்து இருப்பாரென்றால், அவர் அதைக் காத்துக்கொள்ள வேண்டியவராயிருக்கிறார். பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும், அவர் என்றென்றுமாக தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்ள வேண்டும். அவர் அங்கே யேகோவா-யீரே வாக இருந்து, ஆதியாகமத்தில், அவர் யேகோவா - யீரே-வாக இருந்து, அவர் தீர்க்கதரிசிகளோடு கூட இருந்து, அவர் நியாயப்பிரமாணத்தோடு கூட இருந்து, அவர் இயேசுவுக்குள் இருந்து, ஆதி சபையில் இருந்திருப்பாரென்றால், அவர் இப்பொழுதும் இருக்க வேண்டும். ஜனங்கள் ஆதியாகமத்திலும், நியாயப் பிரமாணத்திலும், கிறிஸ்துவிலும், சபையிலும் அவரை விசுவாசிக்கும் போது, அவர் ஆதியில் செய்த அதே காரியத்தை அவர் செய்ய வேண்டுமென்று அவருடைய பிரமாணம் அவரைக் கட்டாயப்படுத்துகிறது. அது அவ்வாறு இல்லை என்றால், அவர் முதலாவது இடத்திலேயே தவறு செய்தார். புரிகிறதா-? அவர் தேவனாக இருப்பதற்கு அதே விதமாகவே செய்தாக வேண்டும்.
நான் உங்களிடம் கூறினது போல, தேவன் இன்றும் அதே தேவனாக இல்லாமல் இருந்தால், ஒரு - ஒரு - ஒரு சரித்திரத்தின் தேவனைக் கொண்டிருப்பது நமக்கு என்ன நன்மை செய்யும்-? புரிகிறதா-? அது நமக்கு எந்த நன்மையும் செய்யாது.
நம்முடைய தேசத்தில் இருப்பது போன்றது அது; நம்முடைய முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன். நல்லது, அது சரித்திரமாக உள்ளது. அது இன்றைக்கு எந்த நன்மையும் செய்யாது. நாம் வேறொரு ஜனாதிபதியைக் கொண்டிருந்தாக வேண்டும். புரிகிறதா-? அவருடைய நாளில் அவர் சரியாகத் தான் இருந்தார். ஆனால் வெறும் ஜார்ஜ் வாஷிங்டன் மட்டும், அவர் - அவர் போய் விட்டார். அவர் இன்று செய்ய மாட்டார். நான் என்ன கூற கருதுகிறேன் என்று புரிகிறதா-?
11. இப்பொழுது, தேவன் வெறுமனே மோசேக்கான தேவனாக இருந்து, அவர் இன்று போய் விட்டிருந்தால், அது நமக்கு என்ன நன்மையைச் செய்யும்-? ஆனால் அவர் மோசேயின் தேவனாக இருக்கிறார். அவர் எலியாவின் தேவனாகவும் இருந்தார். அவர் தாவீதின் தேவனாக இருந்தார். அவர் - கிறிஸ்துவின் தேவனாக இருந்தார். அவர் ஆதி சபையின் தேவனாக இருந்தார். அவர் இன்றும் அதே பிரமாணத்தைக் கொண்டிருக்கும் தேவனாக இருக்கிறார்.... அவருடைய மீட்பின் நாமத்திற்கு கட்டாயப்படுத்துதல், அவர் நிச்சயமாக அதே காரியத்தையே செய்ய வேண்டும், அல்லது அவர் தேவனல்ல.
நாமெல்லாரும் அதைக் கண்டு, அதை ஏற்றுக் கொள்ள முடியும்படி விரும்புகிறேன். அது காரியங்களை மாற்றி விட்டிருக்கும். இப்பொழுது, நீங்கள் உங்கள் கண்களினால் வேதாகம வார்த்தைகளில் காண்பதில்லை. உங்கள் இருதயத்தைக் கொண்டு நீங்கள் காண்கிறீர்கள்.
இயேசு, "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய இராஜ்யத்தை அவனால் காண முடியாது என்று மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று நிக்கோதேமுவிடம் கூறினார். அதை நோக்கிப் பார்” என்பதை அது அர்த்தப்படுத்துவதில்லை, புரிந்து கொள்” என்பது தான் அதற்கு அர்த்தம். பாருங்கள்-? நம்மைக் குறித்து தேவனுடைய மனப்பான்மையை நம்மால் புரிந்து கொள்ள முடியும் போது, அப்போது அவருடைய மீட்பின் நாமத்தின் மூலமாக அவர் வாக்குப்பண்ணியுள்ள ஆசீர்வாதங்களை அருளும்படியாக, தேவன் கட்டாயப்படுத்துகிறார்.
12. இப்பொழுது, நாம் கடந்த இரவில் விட்டு வந்தோம், அங்கே - அங்கே தேவன் அவனை வாலிபனாகவும்), சாராளை திரும்பவும் ஒரு வாலிப் பெண்ணாகவும் மாற்றியிருந்தார். ஏனென்றால் இராஜாவாகிய அபிமெலேக் அவளோடு காதலில் விழுந்தான் என்பதைக் கண்டிருந்த ஒரு வாலிப் பெண்ணாக அவள் இருந்தாள். தேவனோ அவனைக் கடிந்து கொண்டார். ஏன்-? அந்த இரத்த நீரூற்றிலிருந்து, கர்த்தராகிய இயேசு வந்தார். எனவே இயேசு வரும் வரையில், யூத இரத்தமானது சுத்தமாக வைக்கப்பட்டிருந்தாக வேண்டும், எனவே அவர் சாராளை பாதுகாத்துக் கொண்டார்.
சற்று கழிந்து, ஒரு சில மாதங்கள் கழித்து, ஏறக்குறைய நூறு வயதான பெண்மணி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்த அழகான முன்னடையாளத்தை நீங்கள் காணவில்லையா-? உலகத்தினால், அது கூடாத காரியமாக இருந்தது, ஆனால் தேவனால் எல்லாம் கூடும். அது இயேசுவுக்கு ஒரு முன்னடையாளமாக இருந்தது, அவர் பிதாவுக்கு ஒரே பேறான குமாரனாக இருந்தார், மரியாள் எந்த மனுஷனையும் அறியாமலே ஒரு பிள்ளையைக் கொண்டிருந்தாள், தேவனையன்றி அது கூடாத காரியம்.
13. இப்பொழுது, ஆபிரகாமின் குமாரன், ஈசாக்கு பிறந்த போது, நிச்சயமாகவே, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒருவனாயிருந்த ஈசாக்கு என்று அவன் அவனை அழைத்தான். தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணி, அவனுடைய பெயரை ஆபிராம் என்பதிலிருந்து ஆபிரகாம் என்று மாற்றியிருந்தார். அவர் அவனை தேசங்களுக்கு ஒரு தகப்பனாக ஆக்கப் போவதாக இருந்தார். அந்த வரிசையில், அவன் ஜெர்மனியின் பிதாவாக இருக்கிறான். அவன் அமெரிக்காவின் பிதாவாகவும், சுவீடனின் பிதாவாகவும் இருக்கிறான், எல்லாவிடங்களிலும் உள்ள தேசங்களின் பிதாவாகவும் அவன் இருக்கிறான்.
எனவே அவர் இந்தப் பையனை ஏற்றுக்கொண்டு, அவன் மூலமாக சகல தேசத்தையும் ஆசீர்வதிக்கப் போவதாக இருந்தார். நீங்கள் பாருங்கள், அவன் என்னவாக இருந்தான், அவன் கிறிஸ்துவுக்கு ஒரு முன்னடையாளமாக இருந்தான். நடக்க முடியாத (சாத்தியமற்ற) விதமாக அவன் பிறந்தான், அவன் பிதாவுக்கு ஒரே குமாரனாக இருந்தான், அவன் ஒவ்வொரு விதத்திலும் கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாக இருந்தான்.
14. இப்பொழுது, ஆபிரகாம், அந்தப் பையனுக்கு 16 வயதாக இருந்த போது, தேவன் எவ்வளவு பரிபூரணமாக தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்கிறார் என்பதை ஜெர்மனிக்கும், மற்ற உலகத்துக்கும் காண்பிக்கப் போவதாக இருந்தார். அவர் ஆபிரகாமுக்கு இரட்டை சோதனைகளைக் கொடுத்தார்.
இப்பொழுது, அவர், ஆபிரகாமே, இப்பொழுது உனக்கு ஏறக்குறைய 116 வயதாகிறது. நான் உனக்கு வாக்குத்தத்தம் பண்ணின உன்னுடைய சிறிய மகன் ஈசாக்கு இதோ இருக்கிறான். இப்பொழுது, நீ இந்தப் பையனை கூட்டிக் கொண்டு, மலையின் மேல் அவனை கொண்டு சென்று, அங்கே அவனைக் கொன்று போடு” என்றார்.
இப்பொழுது, அவன் தகப்பனாக இருக்க வேண்டியிருந்த ஒரே காரியத்தை அவன் அழித்துப் போடப் போகும் போது, அவன் எப்படி தேசங்களுக்குப் பிதாவாக இருக்கப் போகிறான். அவன் எவ்வாறு அதைச் செய்யப் போகிறான்-? ஆனால் கவனியுங்கள், ஆபிரகாம் ஒரு போதும் தேவனிடம் கேள்விக் கேட்கவில்லை.
அந்தப் பரிதாபமான வயதான தகப்பன் தன்னுடைய மகனை எடுத்து, தூக்கி, அவனை உற்றுப் பார்த்து, அவனுடைய தலைமயிரை பின்னால் தடவிக்கொடுத்து, அவனைக் கன்னத்தில் தட்டிக் கொடுத்து, அவனுடைய மென்மையான கன்னத்தில் தன்னுடைய தாடி இருந்த முகத்தை வைத்து, அவனைத் தன்னுடைய கரங்களில் அணைத்துக் கொண்டான். அவன் தன்னுடைய இருதயத்தில், "அவனுடைய தாயிடம் நான் சொல்ல முடியாது. அவள் ஒருக்கால் புரிந்து கொள்ள மாட்டாள்" என்று கூறினான். எனவே அவன் சில வேலைக்காரர்களை பெற்றுக்கொண்டு, சில கழுதைகளுக்கு சேணம்பூட்டி, பின்னால் இருந்த அந்த வனாந்தரத்திற்கு மூன்று நாள் பிரயாணமாகச் சென்றான்.
15. இப்பொழுது, ஒரு சாதாரண மனிதனால் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 40 கிலோ மீட்டர் தூரம் நடக்க முடியும் என்று நினைக்கிறேன். அது ஏறக்குறைய சரி தான் என்று நினைக்கிறேன். அது ஒப்பிடப்படும் போது... நானே ஒரு நாளைக்கு முப்பது மைல்கள் நடக்க என்னால் முடியும், அது அதுவாகவே இருந்திருக்கும். இப்பொழுது, ஒரு -ஒரு சாதாரண மனிதனால் ஒரு நாளில் அவ்வளவு அநேக மைல்கள் நடக்க இயலும். பின்னால் அந்த வனாந்தரத்தில் அவன் எவ்வளவு தொலைவில் இருந்திருப்பான்-?
தொழுது கொள்ளவே அவன் திரும்பிப் போனான் என்று சாராள் எண்ணினாள். எனவே அவன் மூன்று நாட்கள் பிரயாணம் செய்து, தன்னுடைய கண்களை ஏறிட்டுப் பார்த்த போது, அந்த வனாந்தரத்தில் மிக தூரத்தில் அந்த மலையை அவன் கண்டான். அது எவ்வளவு தொலைவில் இருந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவன் அந்த மலையை நோக்கி சென்று கொண்டிருந்தான். அந்த தகப்பன் தன்னுடைய சொந்த குமாரனுடைய ஜீவனை எடுக்கப் போகிறான் என்பதை அறிந்து, அவன் எப்படியாக வருந்தி இருப்பான் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கிறீர்களா-? அவன் அந்தக் கழுதைகளை நிறுத்தின போது....
16. இப்பொழுது, ஜெர்மானிய ஜனங்களே, சற்று நேரம் கவனியுங்கள். ஆபிரகாமை நோக்கிப் பாருங்கள், அவன் அந்த ஊழியக்காரனிடம் என்ன சொன்னான். அவன், “நீங்கள் இங்கே சற்று நேரம் காத்திருங்கள், பிள்ளையாண்டானும் நானும் அவ்விடமட்டும் போகிறோம். பிள்ளையாண்டானும் நானும் திரும்பி வருவோம்" என்றான். தேவனுக்குத் துதி உண்டாவதாக. அவன் எப்படி திரும்பி வரப் போகிறான்-? இவன் அவனைக் கொல்லப் போகிறானே. பிள்ளையாண்டானால் எப்படி திரும்பி வர முடியும்-?
17. ஓ, கவனியுங்கள். அவனுடைய இருதயத்தில், தேவன் அவனை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப வல்லவராய் இருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான், மரித்தோரில் இருந்து வந்த ஒருவனைப்போல அவன் அவனைப் பெற்றுக் கொண்டிருந்தான். என் அன்பு சகோதரனே, சகோதரியே, இப்பொழுது உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா-? தேவன் தம்முடைய வார்த்தையோடு இயற்கைக்கு மேம்பட்டவைகளைக் காண்பிக்கும்போது, நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். அவர் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார், அதன் பிறகு இயற்கைக்கு மேம்பட்டவைகளின் மூலமாக அவர் அதை நிரூபித்திருந்தார். 
கடைசி நாட்களில் தேவன் தம்முடைய ஆவியை ஊற்றுவார் என்றும், ஆவர் ஆதியில் செய்த அதே அடையாளங்களைக் காட்டுவார் என்றும் தேவன் கூறியிருக்கிறார். அங்கே முன்மாரியும் பின்மாரியும் ஒன்றாக இருக்கிறது. நாம் அதைக் கண்டு கொண்டிருக்கிறோம். நாம் நம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண்டும். இதோ அவருடைய வார்த்தை இருக்கிறது; அது அதை நிரூபிக்கிறது. அவருடைய ஆவியானது ஒவ்வொரு இரவும் வந்து, அது ஆவியானவராக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும்படியாக இயற்கைக்கு மேம்பட்டதைக் காண்பிக்கிறது. 
இப்பொழுது, அவரால் உங்களைச் சுகப்படுத்த முடியாது; நான் உங்களைச் சுகப்படுத்த அவர் அனுமதிக்க மாட்டார், அது அவரால் செய்து முடிக்கப்பட்ட கிரியையாக உள்ளது. அவர் அதை ஏற்கனவே கல்வாரியில் செய்து விட்டார். அவர் உங்களுக்காகவே அதைச் செய்திருக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். உங்களுக்கு விளங்குகிறதா-? அப்படியானால் "ஆமென்” என்று கூறுங்கள். [சபையார், "ஆமென்” என்று கூறுகிறார்கள் - ஆசிரியர்.)
18. அவர் தம்முடைய வார்த்தையை அனுப்பி, நம்மை மிகவும் நேசிக்கிற நம்முடைய பிதாவின் அன்பு மாத்திரமே அது. வார்த்தையைப் பிரசங்கம் பண்ணும்படியாக அவர் தம்முடைய ஊழியக்காரர்களை அனுப்புகிறார். அதன் பிறகு அவர் தம்முடைய கரங்களை நீட்டி, சபைக்குள் வரங்களை அனுப்பி, நீங்கள் அதை விசுவாசிக்கும்படி செய்ய அவர் முயற்சிக்கிறார். சுகமடைய வேண்டுமென்று நீங்கள் விரும்புவதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக இன்றிரவு உங்களைச் சுகப்படுத்த அவர் விரும்புகிறார். ஆனால் நீங்களோ பயப்படுகிறீர்கள். நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள் என்பதன் மூலமாக நீங்கள் - நீங்கள் போகிறீர்கள், ஏனென்றால் நீங்கள் -நீங்கள் அதைத் தான் நோக்கிப் பார்த்து வருகிறீர்கள்; நீங்கள் உங்கள் உணர்வுகளைக் கொண்டே ஜீவித்திருக்கிறீர்கள். அது... உங்களுடைய முழு ஜீவியமும் அதில் தான் சுற்றிக்கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் கட்டாயம் அதை விட்டுத் தூரமாக வந்து, தேவனுடைய வார்த்தையின் பேரில் செயல்பட வேண்டும், நீங்கள் என்ன உணருகிறீர்கள் என்பதின் பேரில் அல்ல, நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதின் பேரில் அல்ல, தேவன் என்ன கூறியுள்ளளார் என்பதின் பேரில், அதன் பேரில் செயல்படுங்கள். அதைக் குறித்து அறிக்கை செய்யுங்கள். "அறிக்கையிடு” என்பதற்கு "அதே காரியத்தையே கூறுவது" என்று தான் அர்த்தம். உங்கள் அறிக்கையின் பேரில் பரிந்து பேசும்படியாக அவர் தம்முடைய சொந்த இரத்தத்தோடு கூட பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கிறார்.
இப்பொழுது, நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு, அதை அறிக்கை செய்யும் மட்டுமாக, அவரால் உங்களுக்காக எதையுமே செய்ய முடியாது; அப்போது தான் அவர் அதன் பேரில் செயல்பட முடியும். அவர் உங்களுக்கு இருக்கிறார் என்று நீங்கள் என்ன அறிக்கை செய்கிறீர்களோ அதன் பேரில் பிரதான ஆசாரியராக அவர் இருக்கிறார். நான் என்ன கூற வருகிறேன் என்று புரிகிறதா-?
19. பாருங்கள், அவர் தமது இயற்கைக்கு மேம்பட்டதை ஆபிரகாமுக்குக் காண்பித்துக் கொண்டிருந்தார்; அவர் உங்களுக்கும் கூட அதைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார். ஆபிரகாம் ஈசாக்கை பலியிட துவங்கின போது, அவனுக்கு ஒரு துளி கவலையும் இல்லாது இருந்தது. தேவன் வல்லவராயிருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான். ஈசாக்கின் மூலமாக அவர் உலகத்தை ஆசீர்வதிப்பார் என்று தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார்.
அவன் விறகை ஒன்றாக வைத்து, அதை ஈசாக்குடைய முதுகின் மேல் வைத்தான். நீங்கள் கவனித்தீர்களா-? அங்கே தகப்பன் மலையின் மேல் ஏற, ஈசாக்கு அவனுக்குப் பின்னால் வருகிறான், அவனுடைய குமாரன் சிலுவையில் அறையப்படும்படியாக கிடத்தப்படப் போவதாக இருந்த அந்த மரத்தை, அவனது குமாரன் சுமந்து கொண்டு போகிறான் (packing). பிதாவானவர் தம்முடைய - ஐ விட்டுச்செல்வது - தம்முடைய குமாரனாகிய இயேசுவை அவர் சிலுவையில் ஆணியால் அறையப்பட வேண்டியிருந்த அதே சிலுவையோடு, மேலே கொல்கதாவுக்கு வழிநடத்திக் கொண்டிருந்தார் என்பதைக் குறித்த என்னவொரு அழகான முன்னடையாளம். ஒரு அழகான காட்சி.
20. அவர் மலையின் மேல் போன போது, அவன் பலிபீடத்தைக் கட்டி, நெருப்பு மூட்டினான். குட்டி ஈசாக்கு, அவன் தன்னுடைய தகப்பனை நோக்கிப்பார்த்து, "தகப்பனே” என்றான்.
அவன், “என் மகனே, இதோ இருக்கிறேன்” என்றான்.
அவன், "இங்கே பலிபீடமும் இருக்கிறது, நெருப்பும் இருக்கிறது, விறகும் இருக்கிறது; ஆனால் பலி எங்கே-?” என்று கேட்டான்.
அதன்பிறகு அந்த கடும் சோதனையான நேரம் வந்தது. அவன் மெதுவான குரலில் (With no wave in his voice), "என் மகனே, தேவன் ஒரு பலியை அருளுவார்" என்றான். ஆமென். எனவே தான் அவர் யேகோவா-யீரே என்று அழைக்கப்பட்டார், "தேவன் தமக்காக ஒரு பலியை அருவார். எல்லா முன்னடையாளங்களும் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியது. அவர் தான் தேவனால் அருளப்பட்ட பலியாக இருக்கிறார்.
இப்பொழுது, கவனியுங்கள். ஆபிரகாம் அந்தப் பெரிய கத்தியை வெளியே உருவினான், அவன் தன்னுடைய மகனின் கரங்களை கட்டி, தன்னுடைய தலையைப் பின்னால் திருப்பிய பிறகு, தன்னுடைய மகனின் தொண்டையை வெட்டப் போவதாக இருந்தான். அவன் தன்னுடைய கரத்தை உயர்த்தின - மேலே உயர்த்தின போது, ஏதோவொன்று உரத்த சத்தமிட்டது (screamed); பரிசுத்த ஆவியானவர் அவனுடைய கரத்தைப் பிடித்து, "ஆபிரகாமே, உன் கையைப் போடாதே. நீ என்னை நேசிக்கிறாய் என்பதைக் காண்கிறேன்” என்றார்.
21. அப்போது என்ன சம்பவித்தது-? ஆபிரகாம் திரும்பிப் பார்த்த போது, அங்கே ஒரு ஆட்டுக்கடா இருந்தது. அது ஒரு ஆண் ஆடாக இருந்தது. அது அந்த வனாந்தரத்திலே தன்னுடைய கொம்புகளில் சிக்கிக் கொண்டிருந்தது. அது சத்தமிடத் தொடங்கின போது, அந்த ஆட்டுக்கடா எங்கிருந்து வந்தது-? இப்பொழுது, நான் உங்களிடம் ஒரு காரியம் கேட்க விரும்புகிறேன். அது எங்கிருந்து வந்தது-? ஆபிரகாம் தன்னுடைய நாகரீகம் எல்லாவற்றிலும் இருந்தும், எல்லா ஆடுகள் மற்றும் அங்கே மிருகங்களைக் குறித்த இருந்த எல்லாவற்றிலும் இருந்தும் 150 கிலோ மீட்டர் பின்னால் தூரத்தில் இருந்தான்.
22. மேலும் கவனியுங்கள். அவன் அந்த மலையின் உச்சியில் இருந்தான், அங்கே எந்தத் தண்ணீருமே கிடையாது. அந்த ஆட்டுக்கடா அங்கே எப்படி வந்தது-? அது எங்கிருந்து வந்தது-? நாகரீகத்திலிருந்து 150 கிலோ மீட்டர் அப்பால் ஒரு மலையின் உச்சியின் மேல், அங்கே எந்தத் தண்ணீரோ, ஒரு ஆட்டுக்கடாவோ இல்லாதிருந்தது. ஓ, தேவன் தமக்காக ஒரு பலியை அருளுவார்.
23. அது ஒரு தரிசனம் அல்ல. அவன் அந்த ஆட்டுக்கடாவைக் குறித்த ஒரு தரிசனத்தை ஒரு போதும் பார்க்கவில்லை. ஆபிரகாம் அந்த ஆட்டுக்கடாவைத் தூக்கி, ஒரு பலிபீடத்தின் மேல் அதை வைத்து, அதைக் கொன்றான், அதிலிருந்து இரத்தம் வடிந்தது. அது ஒரு தரிசனம் அல்ல. அது என்னவாக இருந்தது-? அது உலகத் தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி ஆனவராகிய கிறிஸ்துவாக இருந்தது. அது-அது ஒரு தரிசனம் அல்ல. கவனியுங்கள்.
அந்த ஆட்டுக்கடா ஒரு நிமிடத்தில் உண்டாக வேண்டுமென்று தேவன் உரைத்து, அடுத்த நிமிடத்தில் அவர் அதை வெளியே கொண்டு வந்தார். ஏன்-? அவர் ஒரு பலியை அருளுவார். உங்களுடைய சுகத்திற்காக அவர் ஒரு வழியை அருளுவார். குருடான உங்கள் கண்களுக்காக அவர் ஒரு வழியை அருளுவார். அந்தப் புற்றுநோய் உங்களை விட்டுப் போகும்படியாகவும், அந்த வயிற்றுத் தொல்லை உங்களை விட்டு நீங்கும்படியாகவும் அவர் ஒரு வழியை அருளுவார்.
24. என்னுடைய சகோதரனே, இயேசு கிறிஸ்துவுக்குள் ஏற்கனவே அருளி இருக்கிற, உலகத் தோற்றமுதல் அடிக்கப்பட்ட அந்த ஆட்டுக்குட்டியானவர் இன்றிரவு உங்கள் வியாதிக்காக அருளப்பட்டிருக்கிறார். அவர் அதை ஒரு புஸ்தகத்தில் எழுதியிருக்கிறார். அவர் பரிசுத்த ஆவியை அனுப்பியிருக்கிறார். அவர் சபையில் வரங்களை வைத்திருக்கிறார். இப்பொழுது, அது தேவனுடைய தவறு அல்ல; அது நம்முடைய சொந்த அவிசுவாசமாக இருக்கிறது. அது உண்மை அல்லவா-? நாம் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றால், அது தேவனுடைய தவறல்ல. உங்களுடைய இரட்சிப்புக்காகவும் சுகத்திற்காகவும் உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்டவராகிய இயேசு கிறிஸ்து அருளப்பட்டிருக்கிறார் என்பதை நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? அப்படி ஆனால்) உங்கள் கரத்தை உயர்த்துங்கள்.
25. உங்களுக்கு நன்றி. நீங்கள் மிகவும் அருமையானவர்கள். ஜெர்மானிய ஜனங்களாகிய உங்களை எனக்குப் பிடிக்கும். நீங்கள் தள்ளாடுகிறவர்கள் அல்ல (அது வெறுமனே எதற்கும் குதிப்பது). ஆனால் அது நிரூபிக்கப்படக் கூடுமானால், நீங்கள் திட அஸ்திபாரத்திற்காக எதிர் நோக்குகிறீர்கள். இப்பொழுது நீங்கள் அதைத் தான் எதிர்பார்க்கிறீர்கள். மறுபடியும் ஒன்று சேரும்படியாக நீங்கள் அதைத்தான் எதிநோக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஒருநாள் ஜெர்மனி மீண்டும் ஒன்றாக இருக்க வேண்டுமென்றும், எந்த இரும்புத்திரைகளும் இன்றி, தாய்களும் தகப்பன்களும் ஒன்றாக இருக்க முடிந்து, மகன்களும் தாய்மார்களும் ஒன்றாக இருக்க முடிந்து, குடும்பங்கள் மறுபடி இணைந்து, எல்லாமே சர்வவல்லமையுள்ள தேவனுடைய தலைமையின் கீழ் இருக்க வேண்மென்று நான் அனுதினமும் ஜெபித்துக் கொண்டு இருக்கிறேன். தேவன் அதை அருளுவாராக.
நீங்கள் அறிந்து கொள்ளும்படி செய்ய என்னுடைய பாகத்தைச் செய்ய முயற்சிக்கும்படி இன்றிரவு நான் இங்கே அவருடைய பரிதாபமான அபாத்திரமான ஊழியனாக இருக்கையில், தேவன் அதைச் செய்வார். நான்.... என்பது எனக்குத் தெரியும். நான் ஒரு மிக ஏழை ஊழியன். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடிய வேறு ஏதோவொரு வழியை நான் கொண்டு இருக்க நான் -நான் விரும்பினேன். ஆனால் அவரால் என்னை நம்ப முடிந்த ஒரே வழி இது தான் என்று நினைக்கிறேன். நான் மிகவும் தகுதியற்றவன்; நான் அவருடைய ஆசீர்வாதங்களுக்கு தகுதியற்றவன். ஆனால் அவர் எனக்காக என்ன செய்திருக்கிறாரோ, அது என்னை அவரை அவ்வளவாய் நேசிக்கும்படி செய்கிறது. நான் என்னுடைய சகோதரர்களை நேசிக்கிறேன். அந்த நோக்கத்திற்காகவே நான் வந்திருக்கிறேன்.
26. எனவே சந்தேகம் நிறைந்தவர்களாக உணர வேண்டாம். அது -அது -அது-அது பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்துகிறது. அந்தக் காரணத்தினால் தான் காரியங்கள் அவை இருக்க வேண்டிய விதமாக சம்பவிப்பதில்லை. புரிகிறதா-? நீங்கள்..... இப்பொழுது, அநேக நாட்களில் வேதாகமத்தை வாசிக்க உங்களுக்கு நேரம் கிடைத்து, அவர் கிரியை செய்வதையும், வார்த்தை உறுதிப்படுவதையும் நீங்கள் கண்டிருக்கிறீர்கள். இப்பொழுது, இந்த சக்கர நாற்காலிகளும், மற்றும் காரியங்களும் இங்கே இருப்பதை காண எனக்கு விருப்பமில்லை. அது - அது என்னுடைய இருயத்தைத் துக்கப்படுத்துகிறது. ஆனால் அதைக் குறித்து என்னால் எதுவுமே செய்ய முடியாது. நான் ஒரு ஊழியக்காரன் மாத்திரமே. நான் வெறுமனே அவருடைய வார்த்தையைக் கொண்டு வந்து, நான் செய்யும்படி அவர் என்னிடம் கூறுவதையே நான் செய்ய என்னால் இயலும். இது இப்படி இருக்க வேண்டும் என்பது அவருடைய சித்தமல்ல என்பதில் நான் நிச்சயம் உடையவனாய் இருக்கிறேன். நீங்கள் எல்லாரும் சுகமடைய வேண்டும் என்பது தான் அவருடைய சித்தமாக இருக்கிறது.
"நீ எல்லாவற்றிலும் (எல்லாவற்றிலும்) வாழ்ந்து சுகமாயிருக்கும்படி விரும்புகிறேன்” என்று வேதாகமம் கூறுகிறது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றே அவர் விரும்புகிறார். நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களானால், அவர் உங்களுக்கு சுகத்தைக் கொடுப்பார் என்பதை நான் - நான் அறிவேன்.
27. நாம் ஜெபிப்போம். எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் இன்றிரவு இந்த அருமையான ஜனக் கூட்டத்தினரை உம்மிடம் கொண்டு வருகிறோம். நான் அவர்களைக் காண்கையில், அவர்களுடைய தலையில் நரைத்த தலைமயிர்களையும், தோல் சுருங்கின முகத்தையும் உடைய அநேகரைப் பார்க்கிறேன்; மேலும் அழகான வாலிப பெண்களையும், அழகான வாலிபர்களையும், ஜீவியத்தின் பொலிவுடன் காண்கிறேன்.... பாரும், இங்கே வியாதியோடு ஜனங்கள் படுத்திருக்கிறார்கள், சிலர் முடமானவர்களாகவும், அவர்களில் சிலர் துன்பப்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்களில் சிலருக்கு புற்று நோயும், அவர்களில் சிலர் இருதயக்கோளாறை உடையவர்களாகவும் இருக்கிறார்கள். ஓ தேவனே, இரக்கமாயிரும்.
இப்பொழுது, நாங்கள் - நாங்கள், பிதாவே, நாங்கள் விசுவாசிக்கும் படியாக நீர் அற்புதங்களை நடப்பிக்க எங்களுக்கு விருப்பமில்லை, பலவீனமான விபச்சார சந்ததியார் அந்தக் காரியங்களைத் தேடுகிறார்கள் என்று நீர் சொல்லியிருக்கிறீர். ஒரு ஊனமுற்ற மனிதன் ஒரு சாதாரண ஜீவியத்தை ஜீவிக்கலாம் என்பதை நான்-நான் உணருகிறேன். ஆனால் -ஆனால், பிதாவே, இருதயக்கோளாறை உடைய ஒரு மனிதனால் உமது ஒத்தாசையின்றி நீண்ட காலம் வாழ முடியாது.
28. ஆனால், பிதாவே, நீர் -நீர் உமது ஆவியை ஊற்றி இருதயக்கோளாறையும், புற்று நோயையும், காச நோயையும், எல்லா ஊனமுற்றவர்களையும், முடவர்களையும், குருடர்களையும் குணமாக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். ஓ அன்புள்ள தேவனே, வாரும், நீர் வரமாட்டீரா-? இன்றிரவு இந்தக் கூடாரத்தின் மேல் உமது கரங்களை விரியும். எல்லா அவிசுவாசத்தையும் துரத்தியடியும், உம்முடைய அன்புள்ள குமாரனாகிய இயேசு தாமே, ஒவ்வொரு இருத்திலும் வருவாராக. இயேசு கிறிஸ்துவில் உள்ள உமது மகிமையில் நாங்கள் இதைக் கேட்கிறோம்.
மேலும் இப்பொழுது, பிதாவே, நான் தாழ்மையுள்ள உமது தகுதியற்ற ஊழியன். ஓ, எந்தக் கல்வியும் இல்லாமல், ஆட்டுக்கிடையிலிருந்து நீர் என்னை ஒரு சிறு பையனாக எடுத்து, உமது ஜனங்களிடம் வந்து பேசும்படியான சிலாக்கியத்தை எனக்குக் கொடுத்தீர். பயனற்ற உமது ஊழியனுக்கு நீர் கொடுத்திருக்கிற உமது வரத்தைக்கொண்டு, நான் எதைச் செய்து இருக்கிறேனோ அதைக் காட்டிலும் எந்தவிதத்திலும் மேலாக செய்திருக்கவில்லையோ என்று நான் வெட்கப்படுகிறேன், பிதாவே. ஆனால் அன்புள்ள தேவனே, நீர் என்னை மன்னித்து, உமது அன்பை ஜனங்களுக்குக் காண்பிக்க எனக்கு உதவி செய்யும், என்னுடைய பலவீனமான பிரயாசங்களில் ஒரு சிறந்த ஊழியனாக என்னை ஆக்கும். உமது பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் கரத்தை நீட்டி வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தும். நாங்கள் இதை அவருடைய நாமத்தில், அன்புக்குரிய உமது ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். [சபையார், ஆமென்” என்று கூறுகிறார்கள்.]
29. ஜெபிக்கப்படுவதற்காக கைக்குட்டைகள் உள்ளன. இப்பொழுது நான் -நான் அவைகளுக்காக ஜெபிக்க விரும்புகிறேன். நீங்களும் கூட என்னோடு உங்கள் தலையைத் தாழ்த்தி, ஜெபிக்கும்படி நான் கேட்டுக்கொள்வேன் என்றால், பொருட்படுத்த மாட்டீர்களா-? நீங்கள் என்னோடு கூட ஜெபிக்க விரும்புகிறேன். இது வியாதியாய் இருக்கும் யாரோ ஒருவராக இருக்கிறது. அது உங்கள் தாயாராக இருந்து, அவள் பிழைக்க முடியாது என்று மருத்துவர் கூறியிருந்தால் எப்படி இருக்கும்-? நீங்கள் அவளை எப்படி நேசிக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். இது யாரோ ஒருவருடைய தாயாகவும், யாரோ ஒருவருடைய சிறு பிள்ளையாகவும் இருக்கிறது. எனவே நாம் உத்தமமாக இருந்து, நாம் கொண்டிருக்கும் இந்த பலவீனமான முயற்சியை தேவன் ஆசீர்வதிக்க வேண்டுமென்று வருந்தி வேண்டிக் கொள்வோம்.
30. உங்கள் தலையைத் தாழ்த்துவீர்களா-? அன்புள்ள பரலோகப் பிதாவே, இன்றிரவு நாங்கள் உம்மை மிகவும் நேசிக்கிறோம். நீர் அதை எங்களுக்காக மிகவும் எளிமையாகச் செய்திருக்கிறீர் என்பதற்காக நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாயிருக்கிறோம், நாங்கள் எதற்காகவும் கட்டணம் செலுத்த வேண்டிய இடமோ, நாங்கள் எந்த புண்ணியங்களைச் செய்ய வேண்டிய இடமோ அல்ல, ஆனால் உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கு வெறுமனே எளிய சாதாரணமான விசுவாசமாக இருக்கிறது.
இப்பொழுது, பிதாவே, நான் இந்தக் கைக்குட்டைகளின் பேரில் ஜெபிக்கிறேன், இவைகள் எங்கே போவதாக இருந்தாலும், அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக. இவைகள் வியாதிப் பட்ட ஜனங்கள் மேல் வைக்கப்படும் போது, அவர்கள் தாமே சுகமடைவார்களாக. ஓ பிதாவே, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும். தங்கள் தலைகளைத் தாழ்த்தியுள்ள உமது பிள்ளைகளை நோக்கிப் பாரும். அவர்களுடைய ஜெபத்தைக் கேட்பீரா-? இந்தக் கைக்குட்டைகளை வியாதிப் பட்டவர்களிடமும், தேவை உள்ளவர்களிடமும், அனுப்பி, அவர்களைப் பாதுகாத்தருளும், பிதாவே. அவர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருப்பதற்காகவும், எங்கள் ஜெபத்தை நீர் கேட்கிறீர் என்பதற்காகவும் கூட நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். எனவே நாங்கள் உமது குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் இவைகளை அனுப்புகிறோம். ஆமென். [சபையார், "ஆமென்” என்கின்றனர் - ஆசிரியர்.)

31. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) .... இங்கே ஜெபவரிசையை அழைக்கத் தொடங்கலாம்.... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)
....இல்லை, அவர்கள் சுகமடையப் போகிறார்கள் என்பதற்கு அது அர்த்தமல்ல. என்னால் யாரேனும் ஒருவரை சுகமாக்க முடியுமானால், நான் இங்கே இறங்கி வந்து, ஒவ்வொருவர் இடமும் சென்று, எல்லாரையும் சுகப்படுத்தியிருப்பேன். என்னால் முடிந்திருக்குமானால், நான் அதைச் செய்திருப்பேன். ஆனால் என்னால் முடியாது. வேறு எந்த மனிதனாலும் அதைச் செய்ய முடியாது. இயேசு இங்கே இருந்திருந்தாலும், அவரால் முடிந்திருக்காது, நீங்கள் விசுவாசித்து இருந்தால் மாத்திரமே.
32. கவனியுங்கள். அது வினோதமாக ஒலிக்கிறது, நீங்கள் விசுவாசியாவிட்டால், இயேசுவால் சுகப்படுத்த முடியாது. அவர் தம்முடைய சொந்த நாட்டிற்குப் போனபோது, அவர்களுடைய அவிசுவாசத்தின் நிமித்தமாக, அவரால் அநேக வல்லமையான கிரியைகளை செய்ய முடியாது இருந்தது என்று வேதாகமம் கூறுகிறது. இப்பொழுது, அவர் இன்றிரவு, நீங்கள் எங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்று, இங்கே இந்த மேடையில் நின்றிருந்து, நீங்கள் மேலே அவரிடம் வந்து, "இயேசுவே, நீர் என்னைச் சுகப்படுத்துவீரா-?" என்று கேட்பீர்களானால்.
அவர், "பிள்ளையே, நான் ஏற்கனவே அதை கொல்கதாவில் செய்து முடித்து விட்டேன் என்பதை உன்னால் விசுவாசிக்க முடியவில்லையா-? உன்னுடைய வியாதிக்காக நான் கிரயத்தைச் செலுத்தி விட்டேன். நீ விசுவாசிப்பாயானால், போய் அதைப் பெற்றுக்கொள்” என்று கூறி இருப்பார்.
இதோ அவர் கூறியிருப்பது இருக்கிறது. "உன்னுடைய விசுவாசத்தின்படியே, உனக்கு ஆகக்கடவது.” அவர், "இப்பொழுது, நானாகவே, என்னால் எதுவும் செய்ய முடியாது. பிதா எனக்குக் காண்பிக்கிறதையே நான் செய்கிறேன். பிதா எனக்கு ஒரு தரிசனத்தைக் காண்பிக்கிறார், பிறகு அவர் என்னிடம் கூறுவதைச் செய்கிறேன். அவர் நேற்றும் இன்னும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று சொல்லியிருக்கிறார்.
33. இப்பொழுது, நீங்கள் அப்படியே கேளுங்கள். அது உங்கள் விசுவாசமாக இருக்கிறது. இந்த ஊழியமானது, வந்து உங்களுக்காக ஜெபிப்பதற்கல்ல. உங்களுக்காக ஜெபிக்கும்படி தேவன் என்னை அனுப்பவில்லை. இயேசுவைக் குறித்து உங்களிடம் பேசவே தேவன் என்னை அனுப்பியிருக்கிறார். நான் தேவனுடைய வார்த்தையின் மூலமாகவும், அவருடைய அடையாளங்கள் மூலமாகவும் சத்தியத்தையே உங்களிடம் கூறி இருக்கிறேன் என்று அவர் உறுதிப்படுத்திக் கூறுவதை நீங்கள் காணும்போது, நீங்கள், "இந்த மனிதர் சத்தியத்தையே கூறியிருக்கிறார். இப்பொழுது, கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னை நேசிக்கிறீர் என்று அவர் என்னிடம் கூறுகிறார். நீர் ஜெபத்திற்கு பதிலளிப்பதை நான் கண்டிருக்கிறேன். சீஷர்கள் இருந்தது முதற்கொண்டு அதற்கு மேலும் செய்யப்பட்டிராத காரியங்களை நீர் செய்வதை நான் கண்டிருக்கிறேன். எனவே நான் உம்மை விசுவாசிக்கிறேன், நான் உம்மை ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூற முடியும். அது அதைத் தீர்த்து வைக்கிறது. அப்படியே விசுவாசித்தவர்களாய் வெளியே சென்று, சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது எளிதாக இல்லையா-? அது தேவனுடைய அன்பாக இருக்கிறது.
34. இப்பொழுது, அவர்களுக்காக ஜெபிக்கும்படி, ஒரு சில ஜனங்களை இங்கே மேலே மேடைக்கு அழைப்போம். நான் ஏன் அதைச் செய்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா-? அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாகத் தான், ஆவியானவர் ஜனங்கள் மத்தியில் துவங்க. அது அவர்களுடைய விசுவாசத்தைக் கட்டியெழுப்பத் தொடங்குகிறது. அவர்கள் உடைய விசுவாசம் உயருகையில், அவர் கர்த்தராகிய இயேசுவிடம் பேசினது போன்று, என்னிடம் பேசுகிறார். அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட அந்த ஸ்திரீ, அவள் வெளியே ஜனக்கூட்டத்திற்குள் போய் விட்டாள், இயேசுவோ, "யாரோ ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
எல்லாருமே, "நானல்ல” என்றார்கள்.
அப்போது அவர் வெளியே நோக்கிப் பார்த்த போது, அந்த ஸ்திரீயைக் கண்டார். அவர், "உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
இப்பொழுது, அது அவளுடைய விசுவாசமாக இருந்தது, இயேசுவுடையது அல்ல. அவள் - அவள் இயேசுவின் மூலமாக தேவனிடமிருந்து - தேவனிடமிருந்து வல்லமையை இழுத்தாள். இப்பொழுது, கவனித்து, அவர் அதே காரியத்தைச் செய்யாமல் இருக்கிறாரா என்று பாருங்கள். புரிகிறதா-? பரிசுத்த ஆவியானவர் ஜனங்களிடம் அபிஷேகமாக வந்த உடனே, ஜெப வரிசையானது ஏறக்குறைய நின்று விடுகிறது. அதன்பிறகு அவர் போகிறார்....

*******